Monday, January 30, 2012

நட்சத்திர சார ஜோதிடம்


நட்சத்திர சார ஜோதிடம்

            ஜோதிடத்தில் பலாபலன்கள் கூறுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.அவைகளில் ஒன்று நட்சத்திர சார ஜோதிட முறையாகும்.ஜாதகப்புத்தகத்தை  திறந்துப்பார்த்தால், கிரஹ பாதாச்சாரம் என்று ஒரு குறிப்பு எழுதியிருப்பார்கள்.அதில் எந்தெந்த கிரஹம் எந்தெந்த நட்சத்திரப்பாதத்தில் நிற்கிறது என்பதை கணித்து எழுதியிருப்பார்கள். அந்த கிரஹ பாதாச்சார குறிப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு பலாபலன்கள் கூறமுடியும். இந்த முறையில்தான்  இன்றளவும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஜோதிடர்கள் பலாபலன்கள் கூறிவருகிறார்கள்.அது எப்படி எனப்பார்ப்போம்.

விதி-1
            ஒரு குறிப்பிட்ட கிரஹத்தின் நட்சத்திர சாரத்தில் ஏதாவது ஒரு கிரஹமாவது நின்றால், அந்த குறிப்பிட்ட கிரஹம் நின்ற பாவ பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரஹம் எந்தெந்த  பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவ பலன்களையும் ஜாதகன் தன் வாழ் நாளில் நிச்சயமாக அனுபவிப்பான்.

விதி-2
            ஒரு குறிப்பிட்ட கிரஹத்தின் நட்சத்திர சாரத்தில் எந்த ஒரு கிரஹமும் இல்லையென்றால், அந்த குறிப்பிட்ட கிரஹம் நின்ற பாவ பலன்களையும் மற்றும் அந்த குறிப்பிட்ட கிரஹம் எந்தெந்த  பாவங்களுக்கு ஆதிபத்தியம் பெறுகிறதோ அந்த பாவ பலன்களையும் ஜாதகன் தன் வாழ் நாளில் அனுபவிப்பதற்கு வாய்ப்பில்லை.

விதி-3

            ஒரு குறிப்பிட்ட கிரஹம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ, அந்த நட்சத்திர நாதன் ராசிகட்டத்தில் எந்த பாவத்தில் நிற்கிறானோ அந்த பாவ பலன்களையும்,அந்த நட்சத்திர நாதன் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்தியம் வகிக்கிறானோ,அந்த பாவ பலன்களையும், ஜாதகன் அந்த குறிப்பிட்ட கிரஹத்தின் தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பான்.

            ஜாதகத்திலுள்ள ஒன்பது கிரஹங்களும் நின்ற நட்சத்திர நாதர்களை கண்டறிந்து,அந்த நட்சத்திர நாதர்கள் நின்ற பாவம் மற்றும் ஆதிபத்தியம் பெற்ற பாவங்களைக்குறித்துக்கொண்டால்,ஜாதகர் எந்தெந்த பாவ பலனை எந்தெந்த காலங்களில் அனுபவிப்பார் என்பதை அவ்வப்பொழுது நடப்பிலுள்ள தசா-புக்திகளைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம்.குறிப்பாக நடப்பு புக்தியைக்கொண்டு தெரிந்துகொள்ளலாம். இதன்படி பார்த்தால்  பரவலாக எல்லா கிரஹங்களின் நட்சத்திர சாரங்களிலும் கிரஹங்கள் நின்றால் ஜாதகன் பன்னிரண்டு பாவ பலன்களையும் அனுபவிக்க வாய்ப்பு உண்டு.

உதாரணம்:
கிரஹ பாதாச்சாரம்

கிரஹம்
ராசி
நட்சத்திரப்
பாதம்
நட்சத்திர
நாதன்
நட்சத்திரநாதன்
நின்ற பாவம்
நட்சத்திரநாதன்
பெரும் ஆதிபத்தியம்

லக்னம்
தனுசு
பூராடம் -3
சுக்கிரன்
8
6-11
சூரியன்
கடகம்
பூசம் -3
சனி
5
2-3
சந்திரன்
சிம்மம்
பூரம் -2
சுக்கிரன்
8
6-11
செவ்வாய்
கடகம்
புனர்பூசம் -1
குரு
9
1-4
புதன்
கடகம்
புனர்பூசம் -1
குரு
9
1-4
குரு
சிம்மம்
பூரம் -1
சுக்கிரன்
8
6-11
சுக்கிரன்
கடகம்
ஆயில்யம்-2
புதன்
8
7-10
சனி
மேசம்
அஸ்வினி-1
கேது
10
5
ராஹு
மீனம்
ரேவதி -1
புதன்
8
7-10
கேது
கன்னி
ஹஸ்தம்-3
சந்திரன்
9
8


மேற்கண்ட உதாரணத்தில்

            சூரியன் நின்ற நட்சத்திரநாதன்  சனி, தனுசு லக்னத்திற்கு 5 ஆம் பாவமான மேசத்தில் சனி உள்ளார். தனுசு லக்னத்திற்கு சனி 2-3 க்குடையவர்.எனவே ஜாதகர் 2-3-5 ஆம் பாவ பலன்களை சூரியனுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            சந்திரன் நின்ற நட்சத்திரநாதன் சுக்கிரன். தனுசு லக்னத்திற்கு 8 ஆம் பாவமான  கடகத்தில் சுக்கிரன்  உள்ளார். தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் 6-11 க்குடையவர்.எனவே ஜாதகர் 6-8-11 ஆம் பாவ பலன்களை சந்திரனுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.
 
            செவ்வாய் நின்ற நட்சத்திரநாதன் குரு. தனுசு லக்னத்திற்கு 9 ஆம் பாவமான சிம்மத்தில் குரு உள்ளார். தனுசு லக்னத்திற்கு குரு 1-4 க்குடையவர்.எனவே ஜாதகர் 1-4-9 ஆம் பாவ பலன்களை செவ்வாயினுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            புதன் நின்ற நட்சத்திரநாதன் குரு. தனுசு லக்னத்திற்கு 9 ஆம் பாவமான  சிம்மத்தில் குரு உள்ளார். தனுசு லக்னத்திற்கு குரு 1-4 க்குடையவர்.எனவே ஜாதகர் 1-4-9 ஆம் பாவ பலன்களை புதனுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            குரு நின்ற நட்சத்திரநாதன் சுக்கிரன். தனுசு லக்னத்திற்கு 8 ஆம் பாவமான  கடகத்தில் சுக்கிரன் உள்ளார். தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் 6-11 க்குடையவர்.எனவே ஜாதகர் 6-8-11 ஆம் பாவ பலன்களை குருவினுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.


            சுக்கிரன் நின்ற நட்சத்திரநாதன் புதன். தனுசு லக்னத்திற்கு 8 ஆம் பாவமான  கடகத்தில் புதன் உள்ளார். தனுசு லக்னத்திற்கு அவர் 7-10 க்குடையவர்.எனவே ஜாதகர் 7-8-10 ஆம் பாவ பலன்களை சுக்கிரனுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            சனி நின்ற நட்சத்திரநாதன் கேது. தனுசு லக்னத்திற்கு 10 ஆம் பாவமான  கன்னியில் கேது உள்ளார். எனவே ஜாதகர் 10 ஆம் பாவ பலன்களை சனியினுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            ராஹு நின்ற நட்சத்திரநாதன் புதன். தனுசு லக்னத்திற்கு 8 ஆம் பாவமான  கடகத்தில் புதன் உள்ளார். தனுசு லக்னத்திற்கு அவர் 7-10 க்குடையவர்.என்வே ஜாதகர் 7-8-10 ஆம் பாவ பலன்களை ராஹுவினுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            கேது நின்ற நட்சத்திரநாதன் சந்திரன். தனுசு லக்னத்திற்கு 9 ஆம் பாவமான சிம்மத்தில் சந்திரன் உள்ளார். தனுசு லக்னத்திற்கு அவர் 8 க்குடையவர்.எனவே ஜாதகர் 8-9 ஆம் பாவ பலன்களை கேதுவினுடைய தசா-புக்தி காலங்களில் அனுபவிப்பார்.

            தனுசு லக்னத்திற்கு 12ஆம் பாவமான விருச்சிகத்தில் எந்த கிரஹமும் இல்லை. விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் எந்த கிரஹமும் இல்லை.எனவே 12ம் பாவ பலன்கள் மட்டும் ஜாதகருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

            ஒரு கிரஹத்தின் தசா என்பது மிக நீண்ட காலமாக இருப்பதால் ,கால நிர்ணயத்தின்போது தசாக்களுக்கு பலன் கூறினால் அது துல்லியமாக இருக்காது.தற்காலத்தில் 28 க்கும் மேற்பட்ட அயனாம்சங்கள் புழக்கத்தில் உள்ளன. இதனால் பிறப்பிலுள்ள தசா-புக்தி இருப்பு அயனாம்சத்திற்கு தகுந்தவாறு வேறுபடுகிறது. எனவே நடப்பு அந்தரஙகள் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. நடப்பு புக்தியை மட்டும் எடுத்துக்கொண்டு பலன் கூறினால் பலாபலன்கள் சரியாக இருக்கும் என்பது பலருடைய பொதுவான அபிப்பிராயம்.