அயனாம்சமும் தசா இருப்பில் வரும் குழப்பங்களும்
ஜோதிடத்தில் இரு வகையான ராசி சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய முறை ஜோதிடத்தில் நிராயன ராசி சக்கரம் பயன்படுத்தப்படுகிறது. நிராயன ராசி சக்கரத்தை ஆங்கிலத்தில் Fixed Zodiac என குறிப்பிடுவர். மேற்கத்திய நாட்டினர் சயான ராசி சக்கரத்தை பயன் படுத்துகின்றனர். சயான ராசி சக்கரத்தை ஆங்கிலத்தில் Movable Zodiac என குறிப்பிடுவர்.
ராசி சக்கரத்தின் ஆரம்ப புள்ளியானது மேசம் 0 பாகையில் நிலையாக மாறாமல் இருப்பதாக இந்திய முறை ஜோதிடத்தில் பாவிக்கப்படுகிறது. எனவே இந்திய முறை ஜோதிடத்தில் பயன் படுத்தப்படும், ராசி சக்கரம் நிராயன ராசி சக்கரம் என அழைக்கப்படுகிறது. ராசி சக்கரத்தின் ஆரம்ப புள்ளியானது மேசம் 0 பாகையில் நிலையாக எப்பொழுதும் இல்லாமல், அது வருடத்திற்கு தோராயமாக 51 விகலைகள் வீதம் பின்னோக்கி, நகர்வதாக மேற்கத்திய நாட்டினர் கருதுகின்றனர். இவ்வாறு பின்னோக்கி நகர்ந்து செல்லும் ராசி சக்கரத்தின் ஆரம்ப முனையானது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மேசம் 0 பாகையை தொடும், அந்த ஆண்டை துருவமாக வைத்துக்கொண்டு (Starting year), அந்த ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை உள்ள மொத்த வருடங்களைக் கணக்கிட்டு, அதை 51 விகலைகளால் பெருக்கி வரும் பாகை – கலை – விகலை களை அயனாம்சம் என குறிப்பிடுகின்றனர்.
இந்த அயனாம்சம் தற்பொழுது தோராயமாக 23 பாகைகளாகும். சயான ராசி சக்கரத்தில் ஒரு கிரகம் 37 பாகை ரிசபத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருந்தால், நிராயன ராசி சக்கரத்தில் அந்த கிரகம் 14 பாகை மேசத்தில் இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அதாவது 37 பாகை சயான ஸ்புடத்திலிருந்து 23 பாகை அயனாம்சம் கழிக்கப்பட்டால் மீதம் 14 பாகை என்பது மேசத்திற்குள் வந்து விடும். அதாவது சயான ராசி சக்கரத்திற்கும், நிராயன ராசி சக்கரத்திற்கு இடையே உள்ள ஸ்புட வித்தியாசமே (The longitudinal difference between fixed zodiac and movable zodiac) அயனாம்சம் எனக்கூறப்படுகிறது.
இந்த அயனாம்ச கணிதம் செய்வதில் பஞ்சாங்க கணிதர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது அயனாம்ச கணிதம் செய்வதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் துருவ ஆண்டு (Starting year) இதுதான் என்று ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை குறிப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் கணித்துத்தரும் அயனாம்சம் பஞ்சாங்கத்திற்கு பஞ்சாங்கம் வேறுபடுகிறது. நடைமுறையில் 28 க்கும் மேலான அயனாம்சங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானவை பி.வி.ராமன் அயனாம்சம், கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் மற்றும் லஹரி அயனாம்சங்களாகும். கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்திற்கும், லஹரி அயனாம்சத்திற்கும் இடையே உள்ள வித்தியசம் 06 கலைகளாகும். கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்திற்கும், பி.வி.ராமன் அயனாம்சத்திற்கும் இடையே உள்ள வித்தியசம் 01 பாகையாகும்.
இந்த அயனாம்ச வித்தியாசங்களால், ஜாதகம் கணிப்பவர் பயன்படுத்தும் அயனாம்சங்களைப் பொருத்து தசா இருப்பில் பெரிய அளவில் வித்தியாசங்கள் வருகிறது. தசா இருப்பு என்பது பிறப்பு நேரத்தில் சந்திர நின்ற நட்சத்திர பாகையை கொண்டு கணிக்கப்படுகிறது. உதாரணமாக கிருஷ்ணமூர்த்தி அயனாம்சத்தை பயன்படுத்தி கணிக்கப்பட்ட சந்திரனின் பாகை 10º அஸ்வினி என்றால், பி.வி.ராமன் அயனாம்சத்தை பயன்படுத்தி கணிக்கப்பட்ட சந்திரனின் பாகை 09º அஸ்வினி என இருக்கும். அஸ்வினி நட்சத்திர அதிபதி கேதுவாகும். எனவே கேது தசை இருப்பு எவ்வளவு என கணித்து பார்ப்போம்.
கேது தசை இருப்பு (கிருஷ்ணமூர்த்தி அயனாம்)
= 10º ☓ 7
-----------
13º20′
= 600☓ 7
-----------
800
= 4200
-----------
800
800)4200(5 வருடம்
4000
---------------
200☓12 =2400
800)2400(3 மாதம்
2400
---------------
0
--------------
கேது தசை இருப்பு (கிருஷ்ணமூர்த்தி அயனாம்) = 5 வருடம் 3 மாதம் 0 நாள்
கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்)
= 09º ☓ 7
----------
13º20′
= 540☓ 7
-----------
800
= 3780
--------
800
800)3780(4 வருடம்
3200
------------
580☓12 =6960
800)6960(8 மாதம்
6400
----------
360☓30 = 10800
800)10800(13 நாள்
10400
----------------
400
கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்) = 4 வருடம் 8 மாதம் 13 நாள்

= 5 வருடம் 3 மாதம் 0 நாள்
கேது தசை இருப்பு (பி.வி.ராமன் அயனாம்)
= 4 வருடம் 8 மாதம் 13 நாள்
தசா இருப்பு வித்தியாசம்
= 0 வருடம் 6 மாதம் 17 நாள்
01 பாகை அயனாம்ச வித்தியாசத்தில் 6 மாதம் 17 நாள் தசா இருப்பு வித்தியாசப்படுகிறது. தசாக்காலம் என்பது பல வருடங்களைக்கொண்டது. அதில் புக்தி என்பது ஒரிரு வருடங்களைக்கொண்டது. அந்தரம் என்பது ஓரிரு மாதங்களைக்கொண்டதாகும். உதாரணமாக சுக்கிர தசையின் அளவு 20 வருடங்களாகும். சுக்கிர தசையில் சுக்கிர புக்தியின் அளவு 03 வருடம் 04 மதங்களாகும். சுக்கிர தசையில், சுக்கிர புக்தியில், சுக்கிர அந்தரத்தின் அளவு 03 மாதம் 20 நாட்களாகும்.
இந்த அயனாம்ச வித்தியாசங்களினால் நடப்பு அந்தரம் இதுதான் என்பதை உறுதிபடுத்தமுடியாத நிலை உள்ளது. தசை என்பது நீண்ட காலமாக இருப்பதால், காலத்திற்கு தகுந்தார்போல் மாறும் பலாபலன்களை தசையை வைத்து கூறுவதில்லை. நடை முறையில் 10வருடம் அல்லது 20 வருடங்களுக்கு மனிதனுடைய வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை. ஓரிரு வருட இடைவெளியில் வாழ்க்கை சம்பவங்கள் மாறுவதைக் கண்கூடாக காணலாம். புக்திகள் ஓரிரு வருட இடைவெளியில் மாறக்கூடியதாக அமைந்துள்ளன. கோட்சார பலன் கூறுவதிலும் அதிகபட்சமாக சனி பெயர்ச்சியின் காலம் 2½ வருடங்களாக அமைந்துள்ளது. எனவே கால நிர்ணயம் செய்வதற்கு புக்திகள் மட்டுமே பயன்படும்.
தசா மாற்றம் நிகழும்போது ஜாதகரின் வாழ்க்கை சூழ்நிலைகள் மட்டுமே மாறுவதை காணலாம். அதை ஒரு பொதுப்பலனாகவே கூறமுடியும். புக்திகள் மாறும்போதுதான் உணமையிலேயே வாழ்க்கை சம்பவங்கள் மாறுகின்றன. எனவே புக்திகளுக்கு மட்டும் பலன் கூறினால் போதுமானது.

it is a very nice explanation. i am your fan and have your fundamental book. thankyou.
ReplyDelete