பஞ்ச பட்சி சாஸ்திரம்
“அண்டத்தில் உள்ளதெல்லாம்
பிண்டத்தில் உள்ளது”
என்பது சித்தர்களின்
வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது
என்பதை சித்தர்கள்
கண்டறிந்தார்கள். அது
போல் மனித
உடலானது பஞ்ச
பூதங்களாலானது என்பதையும்
அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட
சாஸ்திரத்தில் சந்திரனுக்கு
உடல் காரகன்,மனோக்காரகன் என்று
பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம்
என்பதை சித்தர்கள்
கண்டறிந்தார்கள்.மனிதர்களின்
உடற்கூறு அவர்கள்
பிறந்த ஜென்ம
நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல்
அமைந்தூள்ளது என்பதையும்
கண்டறிந்தார்கள். உடலை
இயக்குவது உயிர்
காந்த ஆற்றலாகும்.
அந்த உயிர்
காந்த ஆற்றாலானது
சந்திரனினின் சுழற்சிக்கு
தகுந்தார்போல் சில
நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில்
வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில்
உயிர்காந்த ஆற்றல்
வலிமையாக இருக்கும்போது,
எண்ணிய எண்ணங்கள்
எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் உயிர்காந்த
ஆற்றல் வலிமை
குன்றியிருக்கும்போது, எண்ணிய
எண்ணங்கள் நடைபெறாமல்
தடைபடுவதையும் அனுபவத்தில்
கண்டறிந்தார்கள்.
உடலில்
உயிர்காந்த ஆற்றல்
வலிமையாக இருக்கும்போது,
உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும்,
உடலில் உயிர்காந்த
ஆற்றல் வலிமை
குன்றியிருக்கும்போது, உடல்
வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில்
கண்டறிந்தார்கள். உடலில்
ஏற்படும் இத்தகை
மாற்றங்கள் ஒரு
குறிப்பிட்ட கால
சுழற்சியில் இயங்குகிறது
என்பதையும்,அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல்
செயல்பட்டால் வாழ்க்கையில்
எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும்
மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச
பட்சி சாஸ்திரம்
என்னும் தலைப்பில்
உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள்.
“சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை
விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச
பட்சிகள் என்பவை
வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய
ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச
பட்சி சாஸ்திரத்தில்
ஜென்ம நட்சத்திரம்
தெரிந்தவர்களுக்கு ஜென்ம
நட்சத்திர அடிப்படையிலும்,
ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய
பெயரின் முதல்
எழுத்தில் அமைந்துள்ள
உயிர் எழுத்தின்
அடிப்படையிலும் பட்சி
நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ்
எழுத்துக்களை சித்திர
எழுத்துக்கள் என
தமிழறிஞர்கள் குறிப்பிடுவர்.
தமிழ் உயிர்
எழுத்துகளில் குறில்
வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ”
ஆகிய ஐந்து
எழுத்துக்கள் என்ன
வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த
பறவைகள் பஞ்ச
பட்சிகளாக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளன.
அ
- வல்லூறு
இ
- ஆந்தை
உ
- காகம்
எ
- கோழி
ஒ
- மயில்.
மனித
உடல் பஞ்ச
பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச
பூதங்களின் செயல்
பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம்
விளக்குகிறது.
நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று
- கோழி
ஆகாயம்
- மயில்.
பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல்
பஞ்சாக்ஷரம் என்னும்
சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம்
ஜெபிப்பவனை யாராலும்
வெற்றிகொள்ள முடியாது
என்பதை இந்த
சாஸ்திரம் ரகசியமாக
வெளிப்படுத்துகிறது.
ந - வல்லூறு
ம
- ஆந்தை
சி
- காகம்
வ
- கோழி
ய
- மயில்.
பஞ்சாக்ஷர
மந்திரத்திற்குரிய தேவதையான
சிவபெருமானே,இந்த
பஞ்ச பட்சி
சாஸ்திரத்தை முதலில்
தன் குமரனான
முருகப்பெருமானுக்கு அசுரர்களை
அழிக்கும் பொருட்டு
உபதேசித்தார் எனவும்,முருகன் அதை
அகத்தியருக்கு உபதேசித்தார்
எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில்
கூறப்பட்டுள்ளது.
பஞ்ச
பட்சி சாஸ்திரத்தின்
உதவியுடன் கீழ்கண்ட
காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்
sir, i dont see anything in 2018 why sir.pl record and enlighten us
ReplyDeleteநண்பரே! தகவல் தந்தமைக்கு நன்றி பல
ReplyDelete